இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுத ஏற்றுமதித்தடை தளர்த்தப்பட்டுள்ளமையைஅமெரிக்காவின் வாணிப கழகம் வரவேற்றுள்ளது.
இந்த தடை 2008ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்தது.இதன்படி இலங்கைக்கு ஆயுதங்களை மற்றும் பாதுகாப்பு சேவைகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது.
எனினும் இது 2012ம் ஆண்டு கடல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் என்பவைதொடர்பில் திருத்தியமைக்கப்பட்டது.
இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் காலத்தில் இது தளர்த்தப்பட்டுள்ளமையானது இரண்டுநாடுகளின் உறவில் ஆரோக்கியமான விடயம் என்று அமெரிக்காவின் வாணிப கழகம்குறிப்பிட்டுள்ளது.