Breaking
Sat. Dec 21st, 2024

இலங்கை மீனவர்கள் 1205 பேர் இந்திய கடற்படையினரினால் கடந்த ஐந்து வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன், 241 படகுகள்  கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய மீனவர்கள் 2391 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர கடற்படை தலைமை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் குறித்த கடற்படை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post