Breaking
Thu. Dec 26th, 2024
தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள 
அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் 
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.11.2016) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 
நடைபெறவுள்ளது. 
 
ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சுவிஸ்,நோர்வே, சுவீடன் ,ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்கின்றனர். 
இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பது மற்றும் தற்போதைய நிலைமையில் ஐரோப்பாவில் 
வாழும் இலங்கை முஸ்லிம்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
 
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் இத்தகைய நிலைமையில் 
வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் சம்பந்தப்பட்ட
தரப்பினருக்கு எத்தகைய அழுத்தங்களை கொடுப்பது போன்றன தொடர்பாகவும் 
முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

By

Related Post