ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கிறிஸ்தவ முஸ்லிம் இனச் சமூகத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.