இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வின் போது பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆசிய வலய பணிப்பாளர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய ஆசிய வலயத்தில் யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும், மாலைத்தீவு முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை 72 உலக நாடுகளில் யானைக்கால் நோய் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இதில் இந்தியாவிலே மூன்றில் ஒருவர் யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.