இலங்கைக்கும் சர்வதேச யூத அமைப்புகளுக்குமிடையிலான நட்புறவுச் சங்கம் ஒன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க யூத அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா மேற்கொண்டிருந்தார்.
அமெரிக்க யூத அமைப்பின் பிரதிநிதிகள் இதுகுறித்து கருத்து வெளியிடும்போது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் இரு தரப்பு ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது அமைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க யூத அமைப்புகளின் பிரதிநிதிகள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.