நாட்டின் கடுகதி ரயில் சேவை நெட்வேர்க் வலயத்தினை நவீனமயமாக்கும் பொருட்டு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து களனிப்பள்ளத்தாக்கு அவிசாவளை ஊடாக சபுகஸ்கந்த செல்லும் ரயில் பாதை மீளப்புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் கரையோரத்தில் காணப்படும் ரயில் வே தளங்கள் இரட்டை தளங்களாக விரிவாக்கி அமைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வகையில் அளுத்கம வுக்கான ரயில் தளப்பாதையும், பொல்காவல குருநாகலுக்கு இடையிலான ரயில்வே தளங்களுமே விரிவாக்கி அமைக்கப்படவுள்ளன.
அநுராதபுரத்திலிருந்து வவுனியா, மாகோ, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான ரயில் வே பாதைகள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. குருநாகலிருந்து தம்புள்ள வழியாக ஹபரணைக்கான ரயில் வே பாதை புதிதாக அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பத்தரமுல்லை ஊடான ரயில் பாதைகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பானாந்துறையிலிருந்து வியாங்கொடவுக்கான மின்சார ரயில் சேவையொன்றினை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.