Breaking
Sun. Dec 22nd, 2024
தாய்லாந்திற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை வந்தடைந்துள்ளார்.

நேற்று இரவு 11.20 அளவில் யு.எல.883 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கடந்த முதலாம் திகதி தாய்லாந்து நோக்கி சென்றிருந்தார்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் விடுத்த விசேட அழைப்பிற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தாய்லாந்து பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து, மகியங்கனை இராஜமகா விகாரையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட புத்தபெருமானின் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இலங்கை, தாய்லாந்து வர்த்தக மாநாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டின் முடிக்குரிய இளவரசி சக்கரவர்த்தி சிரின்தோனை சந்தித்தனை தொடர்ந்து நேற்று இரவு இலங்கை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

By

Related Post