மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு இன்று (21) இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்புகளின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் வர்த்தகம் சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.