Breaking
Tue. Mar 18th, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விரைவில் இலங்கை வரவுள்ளதாகப் பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இவர், ஏற்கெனவே இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புதுடெல்லியில் இவருக்கிருந்த பொறுப்புக்கள் காரணமாக அது தடைப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post