நோர்வேயின் வெளியுறவு அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் கட்ரோம் எதிர்வரும் 31ம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.
அவர் இலங்கையில் ஜூன் 2ம் திகதி வரை தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரவுள்ள நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்டேயின் விஜயத்துக்கு முன்னோடி விஜயமாகவே டோர் கட்ரோமின் விஜயம் அமையவுள்ளது.
கட்ரோம், இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
இதனைவிட வடக்குக்கு சென்று ஆளுநர் ரெஜீனோல்ட் குரே, முதலமைச்சர் விக்னேஸ்வரன்ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கட்ரோம், ஏற்கனவே 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, இலங்கையில் நோர்வே தூதுவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.