உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருவார் என இந்தியத் தூதரகத்தின் தகவல் ஊடகப்பிரிவுக்குப் பொறுப்பான முதற் செயலாளர் ஈஷா ஸ்ரீநிவட்சவா தெரிவித்துள்ளார்.
திகதிகளை இறுதிசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகைதரும் முதலாவது சந்தர்ப்பமாக நரேந்திர மோடியின் விஜயம் அமையவுள்ளது.
மன்மோகன் சிங் 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தமை போன்று பல்தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர்கள் வந்திருந்தாலும் 28 ஆண்டுகளாக அரசு முறைப் பயணத்தை இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்கத்கது.