இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்ஸின் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் Jean Marin Schuh. இதனை தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம்,: மனித உரிமை தொடர்பான விடயங்களில் கவனம்செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் அந்தநாட்டுடன் உறவுகளை விருத்தி செய்து கொள்ள விரும்புவதாக பிரான்ஸ்தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் செயலிலும் காட்டுகிறது.
இதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமையும் ஒன்று உதாரணம் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.