Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முப்படையினரும் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அத்துடன் இவ் அலுவலகத்தில் பணிபுரிவதற்காக 4 உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டது

வெளிநாட்டுத் தேவைகளுக்கான பிறப்பு, திருமண, இறப்பு, கல்விச் சான்றிதழ், வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்களுக்கான அவர்களின் குடும்பத்தினரின் உதவிகள் புலம் பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியோரு க்கான உதவிகள் வழங்குதல் போன்ற சேவைகளை இப் பிராந்திய பணியகம் மூலம் பெறமுடியும்.

16142837_1571083456241177_3943158489201738935_n 16142235_1571083402907849_4521724689086430212_n 16195621_1571083306241192_3801743759871924943_n

By

Related Post