மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் இலஞ்சம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் சிறு தவறு ஒன்றிருப்பதாகக் கூறி கடமையிலிருந்த குறித்த பொலிஸார் இருவரும் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர். ஜெயராஜ் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் கடந்த புதன்கிழமை குறித்த பொலிஸார் இருவரையும் பணியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.