Breaking
Fri. Dec 27th, 2024
அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் பெற்றோர்கள் சந்தித்த பல இடர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையி ல்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள கூப்பன்களில் மாகாணம், கல்விக் காரியாலயம் மற்றும் குறித்த பாட சாலை என்பனவற்றைக் கண்டறியும் வகையில் இரகசிய இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.

By

Related Post