இலவச சுகாதார சேவைக்கு 150 பில்லியன் ரூபாய்
இந்த வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது. tm
18 -30 வயதுக்கு இடைப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து 13.1சதவீதமாக குறைவடைந்துள்ளது.
1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தண்ணீருக்கான கட்டணம் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் 25 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்குவது குறைக்கப்படும் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 2017ஆம் ஆண்டு 3 வீதம் குறையும்
விவசாயத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனக்கு தெரிந்த வகையில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடும் யானை இல்லை என்றும் கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான 2,000 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.
நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னர் அதில் பிரயோசனம் பெற்றுக்கொள்வது முக்கியமானது. ரயில்வே திணைக்களத்திடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்ப்பதற்காக விஷேட சேவைத்திட்டம் ஏற்படுத்தப்படும். tm