மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
இலவச வைஃபை வலயங்கள் நிறுவப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை றறற.கசநநறகைi.டம என்ற இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவு நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையத்தளத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.