Breaking
Fri. Jan 10th, 2025

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (09) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் இத்திட்டம் இன்று செயற்படுத்தப்படவுள்ளது.

பிரதேசத்தை அண்டிய 100 நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வழங்கப்படவுள்ளது.

இலவச வைபை (WiFi) திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் கொழும்பு கோட்டையில் ஆரம்பித்து வைத்தார். அதன்கீழ் 26 இடங்களில் இலவச வைபை (WiFi) வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வைபை (WiFi) சேவையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Post