கடந்த காலங்களில் உப்பு நிறுவனம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், நிறுவனத்தின் இயந்திரங்களை அடமானமாக வைத்தே வங்கிகளில் கடன் பெற்றதாகவும், இதனால் கடன் தொகை இரட்டிப்பாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நல்லாட்சியின் பின் புதிய நிர்வாகத்தின் கீழ் அனைத்து கடன்களும் மீள் செலுத்தப்பட்டு தற்பாது அதிக இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை உப்பு நிறுவனம் விளங்குவதாக இதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இங்கு பணிபுரியும் பணியாளர்களது சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சிரேஸ்ட பணியாளர்கள் 200 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிறுவனத்தில் முதல் தடவையாக 60 பெண் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார்.