எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.
இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார்.
சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.