Breaking
Mon. Dec 23rd, 2024
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யும் “ரமழான் மலிவு கஸானா சந்தை 2016”  இம்மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30மணி முதல் மாலை 5.00மணி வரை  தெஹிவலை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது
இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் வொன் ஸெய்திஅப்துல்லாஹ்வும் அன்னாரின் பாரியாரும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பர்.
இளம் மாதர்களின் முஸ்லிம் சங்க போஷகரான ஹாலீதா சஹாப்தீன், வைஎம்எம்ஏ பேரவையின் தேசிய தலைவர் சித்தீக் சலிம், வைஎம்எம்ஏ பேரவையின் முன்னாள் தலைவர் காலித் பாரூக், திருமதி மசாரா ஜாபீர் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துக் கொள்வர்.
இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின் அனுசரணையுடன் இளம் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட தையல் வகுப்பில் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு இந்நிகழ்வின் போது சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொருளாரான தேசமான்ய பவாஸா தாஹா தெரிவித்தார்.
இந்த மலிவுச் சந்தையில் சுமார் 64 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தைத்த ஆடைகள் ,அழகு சாதனங்கள், சமையலறை உபகரணங்கள், உணவு வகைகள் உட்பட பலதரப்பட் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பவாஸா தாஹா மேலும் தெரிவித்தார்.
தகவல் : நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்
(ஊடக இணைப்பாளர்- வை. டப்ளியு.எம்.ஏ)

By

Related Post