இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ஹுசைனுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு பெற்றதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அழைப்பு தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமுத்திர பிராந்திய ரீதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் புதிய உறவுகளை வலுப்படுத்தி இரு தரப்புகளை மேன்படுத்த எண்ணியுள்ளதாக ஜப்பான் தரப்பில் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய துறைமுகம் மற்றும் விமான நிலையத்திற்காக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜப்பான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.