21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.