பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு எதிர்வரும் 30 மற்றும் 31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.
இப்பாராளுமன்ற முதல் நாள் அமர்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் திருமதி ரெபின் மூடி கலந்து கொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.
முதல் நாள் அமர்வு காலை 10.00 மணிக்கு இடம்பெறும்.
அத்துடன் இரண்டாவது நாள் அமர்வுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாப ராஜபக்ஷ அதிதியாக கலந்நு கொண்டு விஷேட உரையாற்றவுள்ளார் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் நாள் அமர்வு மாலை 2.30 மணிக்கும் இடம்பெறும்.