Breaking
Wed. Jan 8th, 2025

குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வரும் அனுராதபுரம் மாவட்டம் கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து பழைய கிணறுகள் புனரமைப்பு மற்றும் புதிய கிணறுகள் நிர்மாணித்து கொடுப்பதற்கான வேலைகள் நேற்று முன்தினம் (09) இஷாக் ரஹுமான் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் மூலம்  புனர்நிர்மாணம் மற்றும் புதிதாய் சுமார் 12 கிணறுகள் நிர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post