Breaking
Fri. Jan 10th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி மற்றும் நீர்த்தாங்கி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்டகாலமாக முகம் கொடுத்து வந்த அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்கள் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி அப்பிரச்சினைகான தீர்வினை பெற்றுத்தரும்படி வேண்டிக்கொண்டதற்கமைய அவர் அது குறித்து விசேட கவனம் எடுத்து அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

குறித்த குடிநீர் கிணறு 2018.08.18 அன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

அனுராதபுர மாவட்டத்தில் பல பாகங்களிலும் குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் மக்கள் இருக்கின்றார்கள். எமது தற்போதைய அரசாங்கத்தில் அவர்களுக்கான தீர்வினை சரிவர பெற்றுக்கொடுக்க முடியாமல் இருக்கின்ற சந்தப்பத்திலும் கூட, நான் எனது அயராத முயற்சியினால் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு தனவந்தர்கள் ஊடாக இம்மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வருடத்திற்குள் மாத்திரம் எனது முயற்சியினால் அனுராதபுர மாவட்டத்தில் சுமார் 25 இற்கும் அதிகமான கிராமங்களில் வாழும் மக்களது குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கியிருக்கின்றேன். அனுராதபுர மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் ஏனைய கிராமங்களுக்கும் கிணறுகள்,  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் நீர்த்தாங்கிகள் என்பன வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

(ன)

 

 

Related Post