Breaking
Mon. Dec 23rd, 2024

குடி நீரில் அதிகளவு புலோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்துமக்கள்மிக நீண்டகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியாமல் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். சுத்திகரிக்கப்படா குடி நீரை பயன்படுத்துவதன் மூலம் சிறு நீரக நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவும் அக்கிராமத்தில் அதிகளவாகவே காணப்படுகின்றது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுதப்பட்ட நிதியிலிருந்து 2019.01.27 அன்று குறித்த கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்புயந்திரம் மற்றும் நீர்த்தாங்கிகள் என்பன வழங்கிவைக்கபட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகையில்.

இலங்கை நாட்டில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் உள்ள மாவட்டமாக அனுராதபுர மாவட்டம் விளங்குகிறது. இதற்கு காரணம் இங்குள்ள மக்களுக்கு சுத்தமான அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கிடைக்கப்பெறாமையே.இலங்கை வாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சுத்தமான குடி நீர் இது வரை காலமும் அனுராதபுர மாவட்டத்தில் அதிகளவான பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் கிடைக்கப்பெறவில்லை என்பது யாரும்மருக்க முடியாத உண்மை.

இவ்விடயம் தொடர்பில் காலம் காலமாக அனுராதபுரத்தை ஆண்டு வந்த அரசியல் பிரமுகர்கள் குறித்து சிந்திக்கையில் மிகவும் வேதனையாக உள்ளது.வெறும் 3 வருடங்களையே கொண்ட எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரைக்கும் சுமார் 700 இற்கும் அதிகமான சாதரண மற்றும் அதிதொழிநுட்பத்துடன் கூடிய குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைஅனுராதபுரத்தின் பல பாகங்களிலுமுள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களுக்கு இன,மத,கட்சி பேதமின்றி வழங்கியிருக்கின்றேன் என்பதனை இவ்விடத்தில் மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது முயற்சியில் இவ்வருடத்திற்குள் இது போன்று இன்னும் பல குடி நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்கள்பலவற்றிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. என்பதனையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.

Related Post