Breaking
Wed. Dec 25th, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக் ரஹுமான் .  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள   தென் கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களை இன்று (04) பார்வையிட்டார். மாணவர்களின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்களிடம்  தெரிவித்தார்.
இதே வேளை  இந்த மாணவர்களின் விடுதலை  தொடர்பில் நடவடிக்கை எடுபதற்காக  நாளையும்  (05) ACMC சட்டத்தரணிகள் குழு அனுராதபுரம் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர்  ரிஷாட் பதியுதீனும்  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று மாணவர்களை  பார்வையிட்டதுடன்  அரச உயர்மட்டத்திலும்  பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்

Related Post