Breaking
Mon. Dec 23rd, 2024

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம்

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில்  மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட உள்ளனர்.

பல்கலைக்கழங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வருடம் இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும் என பல்கலைக்கழக கல்வியமைச்சு அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post