புனித ரமானை முன்னிட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் முதலாவது கிப்லா மற்றும் மூன்றாவது புனித பள்ளிவாயல் அல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றுவதில் பலஸ்தீனர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் கடும் கெடுபிடிகளையும், சட்டங்களையும் பிரகடப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாத முஸ்லிம்கள் தமது தொழுகையை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சுமார் இரு இலட்சத்து 20 ஆயிரம் பலஸ்தீனர்கள் ஜும்மா தொழுகையை புனிய பள்ளிவாயலில் நிறைவேற்றியுள்ளனர்.
இத்தொகையுடைய மக்கள் வந்து தமது வணக்கத்தினை நிறைவு செய்தபோதும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எவ்வித வன்முறைச்சம்பவங்களும் பதிவாகவில்லை என இஸ்ரேல் இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் வருகையை முன்னிட்டு கடந்த வியாழன் அக்கஸா பள்ளிவாயலுக்குச் செல்லும் அணைத்து பாதைகளை மறித்து சேதனைச் சாவடிகனை அமைத்த இஸ்ரேல் இராணுவத்தினர், பல்லாயிரம் சிப்பாய்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தினர்.
புனிய ரமழான் மாதத்தின் முதலாவது ஜூம்மா தொழுகையை நிறைவேற்றுவதற்கு சுமார் இரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கு பற்றினர், அவர்களின் ஏராலமான காஸா மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.