Breaking
Mon. Jan 13th, 2025
பாலஸ்தீன சிறுவர்களை கடத்திச் சென்று மூளைச்சலவை செய்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது.
பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மிக நவீன இயந்திர துப்பாக்கி மற்றும் விமான தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேசமயம், எத்தகைய ஆயுதமுமின்றி கற்களை மட்டுமே சண்டையின் போது பாலஸ்தீனர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 20 வரையிலான 50 நாட்களில் 1038 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலியர்கள் உயிரிழந்தவர்கள் 37 பேர் மட்டுமே.
இந்நிலையில், பாலஸதீனியர்கள் வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் சோதனை செய்து வருகிறது. பெண்கள் ஈவு இரக்கமின்றி அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். சிறுவர்கள் கடத்தி செல்லப்படுகின்றனர். சோதனை என்ற பெயரில் பாலஸ்தீன சிறுவர்களை பிடித்துச் செல்லும் இஸ்ரேலிய ராணுவத்தினர் அவர்களை மூளைச்சலவை செய்து மனித வெடிகுண்டாகவும், தீவிரவாத செயல்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனத்துக்கான ஆராய்ச்சி மற்றும் பொது நிகழ்வுக்கான மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடத்திச் செல்லப்படும் பாலஸ்தீன சிறுவர்கள் முதலில் இஸ்ரேல் குழந்தை ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு அதன்பின் மூளைச் சலவை செய்யப்பட்டு பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது

By

Related Post