Breaking
Sun. Dec 22nd, 2024
பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது. இதில் 343 கல்வியாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலை கலாசார ரீதியாக புறக்கணிக்கும் நடவடிக்கைகள் பிளவுபடுத்துபவை என்றும் அவை பாரபட்சமானவை என்றும் கூறி ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் உட்பட 150 பிரிட்டிஷ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடிதம் ஒன்றை எழுதி ஒரு வாரத்துக்குப் பின் இந்த அறிக்கை வருகிறது.

By

Related Post