Breaking
Mon. Dec 23rd, 2024

இஸ்ரேல் வட பகுதியில் தப்கா என்ற இடத்தில் கலிலீ கடற்கரையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு இயேசு கிறிஸ்து 5 ஆயிரம் பேருக்கு 5 அப்பங்கள் மற்றும் 2 மீன்களை வயிறாக திருப்தியுடன் உணவளித்து அற்புதம் செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

எனவே, அங்கு தினமும் 5 ஆயிரம் பேர் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். அந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் புகுந்து மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினார்கள். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தம் அளித்தது.

அது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயம் அருகே சுற்றித்திரிந்த 16 யூத இளைஞர்களை கைது செய்தனர்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2014) ஏப்ரலில் இதே தேவாலயத்தில் யூதர்கள்  தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த சிலுவைகள் சேதப்படுத்தப்பட்டன.

Related Post