Breaking
Thu. Nov 14th, 2024

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதையும் மீறி தொடர்ந்து அமெரிக்கா ஆயுத உதவி செய்கிறது.

தற்போது ரூ.5 ½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதில் இரு நாட்டு மந்திரிகளும் கையெழுத்திடுகின்றனர்.

இந்த ஆயுதங்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா சப்ளை செய்யும். அமெரிக்கா இதுவரை தொடர்ந்து ஆயுத உதவி செய்து வந்தாலும் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக தொகைக்கு ஆயுத ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி காலம் முடியும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது உறுதியாகி உள்ளது.

இந்த ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறி உள்ளார்.

By

Related Post