-இப்னு ஜமால்தீன்-
2014ம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீன் – காஸா மீது மேற்கொண்ட போரில் பலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன், சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் மற்றும் குண்டுகளையும் பயன்படுத்தி யுத்தக்குற்றங்களை புரிந்தது.
இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரணை செய்யுமாறு பலஸ்தீன் அரசு சர்வேதச குற்றவியல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கள் ஒன்றை செய்துள்ளது.
யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட இரு பயில்கள் அடங்கிய ஆவனங்களை கையளித்த பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் ரியாழ் அல்மாலிகி தலைமையிலான குழுவினர், 2014.06.14 ம் திகதியில் இருந்து இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டும் யுத்தக்குற்றங்களை ஆராய்ந்து தீர்பு வழங்குமாறு கோரியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் விசாணைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐ.நாடுகள் சபையின் விசாரணைக்குழுவினர்கள் இரு தரப்பினரும் சர்வதேச மனிதாவிமாச் சட்டங்களை கடுமையா மீரியுள்ளதாககடந்த திங்களன்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இக்காருத்தானது இஸ்ரேலுக்கான மறைமுக ஆதரை ஐ.நாடுகள் சபை வழங்குவதாக உள்ளதாக சர்வதேச ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.