Breaking
Mon. Dec 23rd, 2024
கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற காரணமான போரினை குறிக்கும்.
கால்பந்து மைதானத்திற்குள் கொடிகளை கொண்டு செல்ல காவல்துறை அனுமதி மறுத்தும் மீறினால் கைதி செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தும்  கால்பந்து வீரர்கள் ஃபலஸ்தீனிய கொடியினை எடுத்துச் சென்று இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் இந்த செயலினால் அந்த அணிக்கு அபராதம் வித்திகப்படக் கூடும். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்க எத்தகைய விலையேனும் கொடுக்க தயாராக உள்ளோம் என்று அந்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கான திட்டங்கள் முன்னதாகவே போடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக்கில் “Fly the flag for Palestine, for Celtic, for Justice.” என்ற பக்கம் ஒன்று துவங்கப்பட்டு இதற்கான ஆதரவு திரட்டப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பக்கத்தில் UEFA இஸ்ரேல் மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்றும் ஃபலஸ்தீன ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த பக்கத்தில், “எவரேனும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தால் அது வெறுமனே கால்பந்து போட்டியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் மேலும் செல்டிக் கால்பந்து அணியை இஸ்ரேலின் அக்கிரமங்களை மூடி மறைத்து மற்றுமொரு சாதாரண நாடு போல காட்சிபடுத்த பயன்படுத்தப்படுகிறது என்றும் இதுவரை இஸ்ரேல் மீறியுள்ள அனைத்து சர்வதேச சட்டகங்களுக்கும் இஸ்ரேல் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் செல்டிக் அணி ரசிகர்கள் ஃபலஸ்தீன கொடியினை பறக்க விடுவது இது முதல் முறை அல்ல. 2014 இல் இது போல ஃபலஸ்தீன கொடியினை பறக்க விட்டதற்காக அந்த அணிக்கு 18,000 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post