Breaking
Sun. Dec 22nd, 2024
பலஸ்தீனர்கள் மீது உயிர்ப்பலி கொள்ளும் பலப்பிரயோகம் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படையினர் மீது புது வகையான போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராட்ட அமைப்புகள் எச்சரித்துள்ளன.
காசாவில் கடந்த செவ்வாயன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பலஸ்தீனர்களை படுகொலை செய்தால் தமது அமைப்பு இன்திபாழா போராட்டத்தில் இணை வதாக எச்சரித்தது.
கிழக்கு ஜரூசலம் மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவளிக்கு வகையிலேயே இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் காலித் அல் பட்”அல்-குதுஸ் படையணி மற்றும் அல்-கஸ்ஸாம் படையணியினர் ஒரு பக்கம் மாத்திரம் இரத்தம் சிந்தப்படுவதை ஏற்காது” என்று எச்சரித்தார். இந்த இரு படையணிகளும் மேற்படி இரு அமைப்புகளினதும் ஆயுதப் பிரிவுகளாகும்.
“உங்களது குற்றச்செயல்களின் மூலம் இன்திபாழாவின் வெற்றியை தோற்கடிக்க முடியாது. களத்தில் நீங்கள் செய்யும் பாரிய படுகொலைகளுக்கு அதிகம் விலை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
அண்மைய பதற்றங்களில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இஸ்ரேல் படையினரின் தாக்குதல்க ளில் குறைந்தது 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள னர்.

By

Related Post