Breaking
Mon. Dec 23rd, 2024
இஸ்ரேல் படையினர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயன்ற பொய் குற்றச்சாட்டில்கடந்த செவ்வாயன்று மேலும் மூன்று பலஸ்தீனர்கள் சுட் டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் சடலங்களை அராஜக இஸ்ரேல் நிர்வாகம் தர மறுப்பதற்கு எதிராக ஹெப்ரூன் நகரில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் படையினருடன் மோதல் ஏற்றபட்டது. இதில் பலஸ்தீனர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
இதில் ஹெப்ரூன் நகரின் டெல்ருமைதா பகுதியில் இஸ்ரேல் படையினரின் மீது கத்திக்குத்து தாக்கு தல் நடத்த முயன்றதாக ஒரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டார். சோதனைச் சாவடியில் இருக்கும் இஸ்ரேல் படையினர் மீதே அந்த பலஸ்தீனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் செய்தி இணைய மான யினெட் குறிப்பிட்டுள்ளது.
இதில் 23 வயது ஹம்மத் செய்யித் என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக பல ஸ்தீன செய்திச் சேவையான மஅன் உறுதி செய்துள்ளது. இதன்போது எட்டு துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்ட தாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி செயற்பாட்டாளர்கள் சமூக தளங்கள் ஊடே வெளியிட்ட செய்தி யில், இவ்வாறு சுடப்பட்டு கொல்லப் பட்ட பலஸ்தீனருக்கு அருகில் படை யினர் கத்தியை வைத்ததாக குறிப்பி டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த இளைஞனின் ஆடை களை களைந்த இஸ்ரேல் படையி னர், பின்னர் சடலத்தை பைக்குள் போட்டதாக அந்த செயற்பாட்டாளர் குழு விபரித்துள்ளது.
முன்னதாக நேற்றுமுன்தினம் மேலும் இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்ல ப்பட்டனர். தெற்கு பெத்லஹாமில் இருக் கும் ய+த குடியேற்ற பகுதியிலேயே இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது கத்திக்குத்து தாக்குத லுக்கு இலக்கான 19 வயது இஸ்ரேல் வீரர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதாக nஜரூசலம் மருத்துவமனை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. 17 வயது ‘பான் அபூ n’ய்க் மற்றும் 22 வயது நபீல் அப்த் அல்முத்தி துவைக் என்ற பலஸ்தீன சந்தேக நபர்களே கொல் லப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இஸ்ரேலுக்கு எதிராக தொடரும் பலஸ்தீனர்களின் போராட் டத்தில் இம்மாத ஆரம்பம் தொடக் கம் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீன ர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியு ள்ளது.
இதேவேளை ஹெப்ரூன் நகரில் கட ந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பலஸ் தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்ற னர். ஹெப்ரூன் நகரில் இஸ்ரேல் படையினர் மற்றும் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்ட 11 பலஸ்தீனர்களின் சடலங்களை தரும் படி இஸ்ரேல் நிர்வாகத்திற்கு அழுத் தம் கொடுத்தே இந்த பேரணி இடம் பெற்றது.
தாக்குதல் நடத்த முற்பட்டதாக குற் றம் சாட்டி சுட்டுக் கொல்லப்பட்ட 16 பலஸ்தீனர்களின் சடலங்களை இஸ் ரேல் நிர்வாகம் குடும்பத்தினருக்கு கொடுக்காமல் வைத்திருப்பதாக பல ஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பேரணியின்போது இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் குறைந்தது 143 பலஸ்தீனர்களுக்கு காயம் ஏற்ப ட்டிருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
“ஹெப்ரூனில் இதுபோன்ற ஆர்ப்பட் டத்தை முன்னர் கண்டதில்லை” என்று அந்த நகரைச் சேர்ந்த குடியேற்றத் திற்கு எதிரான இளைஞர் அமைப்பின் இணைப்பாளர் இஸ்ஸா அம்ரோ குறி ப்பிட்டுள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம், ரப்பர் குண்டு தாக்குதல், அதிர்ச்சி தரும் எறிகுண்டு பிரயோகம் மேற் கொள்ளாமல் இருந்திருந்தால் மோதல் ஏற்பட்டிருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது 10 ஆர்ப்பாட்டக்காரர் கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாகவும் பலரும் கைது செய் யப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பலஸ்தீன தாக்குதல்தாரி என குற் றம் சாட்டப்படுபவர்களின் சடலங்களை அவர்களது குடும்பத்தினருக்கு கொடு ப்பதில்லை என்று இம்மாத ஆரம்பத் தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர வையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த திட்டம் இன்னும் சட் டமாக அமுல்படுத்தப்படவில்லை.
நீடித்துவரும் பலஸ்தீனர்களின் போரா ட்டத்தை ஒடுக்குவதற்கு இஸ்ரேல் பிர தமர் பென்ஜமின் நெதன்யாகு அண் மையில் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருந்தார். அதில் கிழ க்கு ஜெரூசலத்தில் பலஸ்தீன பகுதி களை முடக்குவது, வீடுகளை தகர்ப் பது, அல்அக்ஸா பள்ளிவாசல் வளா கத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதி ப்பது போன்றவையும் அடங்குகின்றன.
கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இஸ்ரேல் படையினரால் 1,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலஸ் தீன கைதிகளுக்கான அமைப்பு குறி ப்பிட்டுள்ளது.
அண்மையில் கொல்லப்பட்ட பலஸ் தீனர்களில் ஒருசிலரது சடலங்களை இஸ்ரேல் நிர்வாகம் குடும்பத்தினரு க்கு கடுமையான நிபந்தனைகளுடன் கையளித்துள்ளது. கிழக்கு nஜரூச லத்தில் இம்மாத ஆரம்பத்தில் கொல் லப்பட்ட 19 வயது பதீ அலும் என்ற இளைஞனின் சடலத்தை வழங்குவத ற்கு இஸ்ரேல் நிர்வாகம் அவரது குடு ம்பத்தினரிடம் 5,200 டொலர்களை கேட் டுள்ளது.
அதேபோன்று இறுதிச்சடங்கில் 70 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி க்கப்படுவதாகவும் நிபந்தனை விதித்து ள்ளது.
இந்த நிபந்தனைகள் யுத்தம் தொட ர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை தெளிவாக மீறுவதாக உள் ளதென மேற்குக் கரையில் இருந்து இயங்கும் கைதிகளுக்கு ஆதரவான அமைப்பின் வழக்கறிஞரான பாராஹ் பயத்சி குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post