Breaking
Sun. Dec 22nd, 2024

Forum for National Unity என்ற அமைப்பினால் நேற்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாராட்டுவதற்காக, வெள்ளவத்தை The Excellency மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் உரையாற்றுகையில், ISIS என்பது இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

இதே வைபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர் செய்துவரும் சூழ்ச்சிபற்றியும் குறிப்பிட்டார். போலி ஈரானிய பாஸ்போட்டில் இலங்கை வந்த இஸ்ரேலிய பிரஜை, விமான நிலையத்தில் பிடிபட்டு, திருப்பி அனுப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டார். விரும்பத்தகாத சம்பவமொன்று நடந்த இடத்தில், இந்த பாஸ்போட் கண்டெடுக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லீம் நாட்டின் மீது பலியைப் போட்டிருப்பர் என்றும் கூறினார்.

By

Related Post