Breaking
Mon. Dec 23rd, 2024

நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­களில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடை­பெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வல­யத்­தினால் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்­சைக்­கு­ரிய வினாத்­தாள்­களில் பார­தூ­ர­மான எழுத்துப் பிழைகள் இடம்­பெற்­றி­ருந்த­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரி­வித்­துள்ளார்.

குறித்த வினாத்­தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்­பட்­டிருந்­த­தா­கவும் இது இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள அஸ்வர் இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வரும் வகையில் அவர்­க­ளுக்கு எழுத்து மூலம் அறி­விக்­க­வுள்­ள­தாகவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

மன்னார் வலயக் கல்வி அலு­வ­ல­கத்­தினால் இரண்டாம் தர மாண­வர்­க­ளுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட இஸ்லாம் பாட வினாத்­தாளில் முத­லா­வது வினாவில் இணைக்­குக எனும் பகு­தியில் ஐந்து கேள்­வி­களும், அதற்குப் பொருத்­த­மான பதில்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

அதில் ஐந்­தா­வது இடத்தில் ‘நபி­ய­வர்­களின் தாய்’ என்­ப­தற்கு பதி­லாக ‘நபி­யா­வர்­களின் நாய்’ என அச்­சி­டப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று மூன்றாம் தரத்­திற்­காக தயா­ரிக்­கப்­பட்ட இஸ்லாம் பாட வினாத்­தாளில் சரி­யான விடையின் கீழ் கோடி­டுக பகு­தியில் கேட்­கப்­பட்ட மூன்­றா­வது கேள்­வியில் ‘நபி (ஸல்) அவர்­களின் தாயாரின் பெயர் ‘ என்­ப­தற்கு பதி­லாக ‘நரி (ஸல்) அவர்­களின் நாயாரின் பெயர் ’ என அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பவம் கண்டனத்துக்குரியதாகும் என்றார்.

By

Related Post