Breaking
Mon. Dec 23rd, 2024

கடந்த சில நாட்ககளுக்கு முன் இளம் நடிகரை ஈர்த்த இஸ்லாம் தலைப்பில் ரங்கூன், போடா ஆண்டவனே நம்ம பக்கம் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டுள்ள

விக்னேஷ் எனும் இளம் நடிகருக்கு திருக் குர் ஆன் வழங்கிய செய்தியை பதிவிட்டு இருந்தோம் !

வாங்கிச் சென்ற குர் ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார்! ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி விட்டது! ஒரு கட்டத்தில் “ஆம் நான் முஸ்லிமாகி விட்டேன் ! அதன் படித்தான் வாழப் போகிறேன்!” எனக் கூற தாயும் தந்தையும் “வீட்டை விட்டு வெளியேறு” எனச் சொல்ல, என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் போன் செய்தார்!

“நான் தவறான வழியில் செல்லவில்லை” என முடிந்தவரை பெற்றொரை சமாதானம் செய்து பாருங்கள் ! முடியாத பட்சத்தில் வந்து விடுங்கள் ! இறைவன் இருக்கிறான் இலட்சக் கணக்கான என்னைப் போன்ற உங்கள் உடன் பிறவாத சகோதரர்கள் இருக்கிறோம் எனக் கூறியதும் இல்லை அங்கு இருக்க முடியாது நான் வந்து விடுகிறேன் என காலை வந்து விட்டார் ! ஏற்கனவே குடும்பத்தை விட்டு வந்து இங்கு தங்கி உள்ள இரு திண்ணைத் தோழர்கள் நம்மோடு உள்ளார்கள் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என பள்ளியில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தோம் ! பொறியியல் படித்துள்ள தனக்கு “தன்மானத்துடன் வாழ எனக்கு ஒரு உடனடி வேலை தேவை” என்றார் இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளோம் !

கொண்ட கொள்கைகைக்காக குடும்பத்தைத் துறக்கும் முஹாஜிரீன்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் ! அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! அல்ஹம்து லில்லாஹ்

Related Post