Breaking
Sun. Dec 22nd, 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.

இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவேதான் கல்வியமைச்சரிடம் இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.

இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.

இதுகுறித்து கல்வியமைச்சு மாத்திரமின்றி, வடமாகாண சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். வடமாகாண சபையின் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் தொடர்பில் முஸ்லிம்களிடம் ஏற்கனவே நியாயபூர்வ சந்தேகம் உள்ளது. இந்திலையில் பரீட்சை வினாத்தாளில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மனதை புண்படுத்தப்பட்டுள்ளமை குறித்து வடமாகாண சபையும் அவதானம் செலுத்த வேண்டுமென்றார்.

By

Related Post