மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்போவதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார்.பிரித்தானியாவின் லண்டன் நகரில், உரை நிகழ்த்திய அவர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் மோசமாக நடத்தப்படுவதாக கூறினார்.ஐஎஸ் வாதிகளின் ஆட்சியில் இருக்கும் பிரதேசம், பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கான பெரும் தளமாக மாறலாமென கூறிய அவர், அந்த நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாதென தெரிவித்தார்.இதேவேளை, ஈராக்கிற்கு முற்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதினைந்து மில்லியன் டொலரை வழங்குவதாக அறிவித்தார். ஈராக்கின் பிரதம மந்திரி பதவியை ஏற்கவுள்ள ஹைடெர் அல் அபாடி (Haider al-Abadi) உட்பட்டவர்களை அவர் சந்தித்தார். அவருடன் கனடாவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.