Breaking
Mon. Jan 13th, 2025

ஐ.எஸ்.’ அமைப்பினர் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.

‘அங்கு இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள் தங்களுக்கென்று தனியாக செலவாணியை அதாவது ரூபாயை உருவாக்கியுள்ளனர்.

ஈராக்கின் மொசூல், சிரியாவின் நயன்வே மாகாணத்தின் பள்ளிகளில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தங்களின் ரூபாய்க்கு ‘தினார்’, ‘திர்காம்’ என பெயரிட்டுள்ளனர்.

‘தினார்’ நாணயம் சுத்த தங்கத்தினாலும், ‘திர்காம்’ நாணயம் வெள்ளியினாலும் தயாரிக்கப்படுகிறது. தங்க நாணயம் 4.3 கிராம் எடையுடனும், வெள்ளி நாணயம் 3 கிராம் எடையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவிலான இந்த நாணயங்களின் ஒருபுறம் இஸ்லாமிய வாசகங்கள் இருக்கும். மறுபுறத்தில் நாணயம் அச்சடிக்கப்பட்ட வருடம், தேதி மற்றும் நாட்டின் ஆட்சியாளர் விவரமும் இருக்கும்.

இந்த புதிய நாணயங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுகிறது. தற்போது இங்கு புழக்கத்தில் உள்ள சாதாரண தினார் மற்றும் லிரா நாணயங்கள் தங்க தினாராகவும், வெள்ளி திர்காம் ஆகவும் மாற்றப்படுகின்றன.

Related Post