Breaking
Wed. Dec 25th, 2024
இஸ்லாமிய கூட்டுத்தாபன நிர்வாக குழுவின் இலங்கை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் இஸ்லாமிய கூட்டுத்தாபன செயலாளர் நாயகம் இயாட் அமீன் மதானியின் இலங்கை விஜயம் பிற்போடப்பட்டதாக ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் 65 வது அமர்வின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்புக்கு இணங்க செயலாளருடன் 4 தூதுவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தனர்.
இஸ்லாமிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் குறித்த அதிகாரிகள் சமயங்கள் சார்ந்த பிரதிநிதிகளை சந்திப்பதுடன், சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முக்கியமாக ஆராயவுள்ளனர்.
ஏற்கனவே, இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான இஸ்லாமிய கூட்டுத்தாபன அமைப்பு தமது கவனத்தை செலுத்தியிருந்தது.
இந்தநிலையில், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுயோக்கில் வைத்து உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post