பெண்ணினத்தின் பெருமையை பேணுவதர்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு வளையம் தான் பர்தா இஸ்லாத்தை விமர்ச்சிப்பதர்கு பலர்கள் இந்த பர்தா முறையையே காரணமாக கூறுகின்றர்
பர்தாவை அணியும் பெண்கள் அதில் பெண்ணினத்தின் பாது காப்பை உணர்வதாக தெளிவாக சொல்லி கொண்டிருக்கும் போது அறிவாளிகள் என்ற பெயரில் வலம் வரும் சில முட்டாள்கள் பர்தாவை பற்றி விமர்ச்சித்து கொண்டிருப்பது வேதனைக்கும் வேடிக்கைக்கும் உரியதே இந்த நிலையில் பிரிட்டன் தலைமை நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி லோர்த் பர்தா பற்றி கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன
ஆம் பிரிட்டன் என்பது ஒரு பண்முக தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும்அந்த அடிப்படையில் முஸ்லிம்பெண்களின் அடிப்படை உரிமையான பர்தா அணியும் உரிமையை யாரும் பறிக்கவோ பரிகாசம் செய்யவோ முடியாது செய்யவும் கூடாது
பிரிட்டனின் நீதிமன்ற பணிகளில் ஈடுபடும் இஸ்லாமமிய பெண்களுக்கு அவர்களின் மத அடையாளமான பர்தாவை அணிவதர்கு முழு சுதந்திரம் வழங்கபடவேண்டும் அதை நாம் முஸ்லிம்களை மதிப்பதர்கு உரிய அடையாளமாக கருத வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்
நீதிமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக டெலிகிராப் என்ற பிரிட்டன் பத்திரிகை கூறியுள்ளது.