Breaking
Wed. Dec 25th, 2024

20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில் பங்கெடுத்தார். ஜெர்மன் நிதி அமைச்சரின் கருத்து மாநாட்டில் பலரையும் கவரும் விதத்தில் இருந்தது

ஜெர்மன் நிதி அமைச்சர் தனது உரையில்

உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது . உலக வங்கிக்கு இணையாக சவுதியின் முழு ஒத்துழைப்புடன் செயல் படும் இஸ்லாமிய வங்கி செயலாற்றி வருவதை நாம் அறிவோம்.

மத்திய கிழக்கிலும் கிழக்கு ஆசியாவின் தென் பகுதியிலும் ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தின் அடிப்பைடையில் வட்டி இல்லாத வங்கிமுறைகள் செயல் படுத்த பட்டு வருகிறது . இந்த செயல் திட்டத்தை மற்ற நாடுகளிலும் நடைமுறை படுத்துவது பற்றி நாம் ஆராய வேண்டும் இவ்வாறு ஜெர்மன் நிதி அமைச்சரின் உரை அமைந்திருந்தது.

Related Post