Breaking
Sun. Dec 22nd, 2024

தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா ஹிடம் (Tun Musa Hitam) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை சந்தித்த போதே இவ்விடயத்தினை தெரிவித்தார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் நடைபெறும் 12 ஆவது சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தி 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

தெற்காசிய வலயத்திற்கு உட்பட்ட பொருளாதார நிபுணர்களின் அறிவை இலங்கையின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொடுப்பதற்கான விசேட சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஆகியோரும் இக்கலந்துரையாடலில் உடனிருந்தனர்.

By

Related Post