வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான்
இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர்கள் உயிர் இழந்தது மிக பெரிய சோகத்தை உருவாக்கியது
இந்த குண்டு வெடிப்பு தொடர்ப்பானா விசாரணையை விரைவு படுத்திய சவுதியின் உளவுதுறை மற்றும் காவல் துறையினர் சம்பவத்தோடு தொடர்ப்புடைய பலர்களை கைது செய்துள்ளனர்
இது தொடர்ப்பாக சவுதி மன்னர் சல்மான் நேற்று குறிப்பிடும் போது
வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே வெடிகுண்டை வெடிக்க செய்பவன் முஸ்லிம் என்று தனக்கு பெயர் வைத்து கொண்டாலும் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது
இறைவனோ இறைவனின் நபியோ இது போன்று ஒரு கலாட்ச்சாரத்தை நமக்கு கற்று தரவில்லை
அமைதியையும் அறத்தையும் போதிக்கும் ஒரு மார்கத்தில் இருந்து கொண்டு இது போன்று செயலாற்றுவது அந்த மார்கத்தின் புனிதத்தை கெடுக்கும் செயலாகும்
எனவே இந்த செயலை செய்தவர்கள் இந்த செயலில் தொடர்ப்பு உடையவர்கள் அதர்காக திட்டம் தீட்டியவர்கள் அனைவர்களும் இனி இது போன்று ஒரு செயலை சிந்திக்க முடியாத அளவிர்கு கடுமையாக தண்டிக்க படுவார்கள்
மேலும் இந்த நாட்டின் அமைதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாம் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்